பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்..!
பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் கே சன்பீர் இயக்கத்தில் சித்திக், ரம்யா நம்பீசன், ஜோஜூ ஜார்ஜ், ஆஷா சரத், அதிதி ரவி போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ். இந்த படத்தில்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்லோஸ் என்ற டெலிவரி பாய் கேரக்டரில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார். அவரின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆண்டு இறுதியில் படத்தின் தொடங்கப்பட்டது. அதன் பிறகு எர்ணாகுளம், தொடுபுழா உள்ளிட்ட இடங்களை சுற்றி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த பர்ஸ்ட் லூக் போஸ்டர் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy to share #PEACE first look poster. Congrats @ActorJojuGeorge & team.#peacethemovie@C_I_N_E_M_A_A @sanfeerk @AditiRavi_ @nambessan_ramya @JubairMuhammed5 @Peacethemovie pic.twitter.com/HZN84VKSJw
— VijaySethupathi (@VijaySethuOffl) May 30, 2021