#Breaking:பாலியல் புகார்-PSBB பள்ளியில் மேலும் ஒரு நபர் கைது..!
PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர் ,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததன் காரணமாக,கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ,கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர்,காவல்துறை அவரை கைது செய்து நேற்று இரவு முழுவதும் விசாரணை நடத்தியது.மேலும், விசாரணைக்கு பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில்,PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர்,தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக,பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,கராத்தே மாஸ்டர் ராஜ்,தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,அவர்மீது பல மாணவிகள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து,மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர்,கராத்தே மாஸ்டர் ராஜை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றார்.