உயிருக்கு போராடிய கேரள ஓட்டுநர்…! முதலுதவி செய்து சுவாசத்தை மீட்ட தமிழக காவல்துறை..!
உயிருக்கு போராடிய கேரளா ஓட்டுநரை, முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே இரண்டாவது வளைவு சாலையில் வந்தபோது, மினி லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதில் அந்த லாரியை ஓட்டி வந்த அபிலாஷ் என்ற ஓட்டுநர் சுயநினைவு இழந்து உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட கியூ பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோர் அப்போது அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து கிடந்த டிரைவர் அபிலாசை கண்டு அவரை பரிசோதித்தனர். அப்போது அவரின் சுவாசம் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டு துரிதமாக செயல்பட்டு டிரைவரின் மார்பில் சி.பி.ஆர் என்னும் முறையால் கைகளால் அழுத்தம் கொடுத்து தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.
இதனை அடுத்து சிறிது நேரத்தில் டிரைவர் அபிலாஷ் சுயநினைவு திரும்பி கண்களை திறந்தார். பின் இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்திலுள்ள பூக்கொட்டுபாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த கேரள போலீசார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்து டிரைவர் அபிலாசை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ஓட்டுநர் அபிலாஷின் உயிரை காப்பாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் இருவருக்கும் பாராட்டுக்கள் .குவிந்து வருகிறது.