கொரோனாவால் உயிரிழந்த நக்சலைட்…! இறுதிச்சடங்கு செய்த போலிஸார்…!

Default Image

சத்தீஸ்கரில் கொரோனாவால் உயிரிழந்த நக்சலைட்டுக்கு, காவல்துறையினர் இறுதி சடங்கு செய்து வைத்துள்ளனர்.

சத்தீஸ்கரில் மாநிலம், சுக்மாவில் நக்சலைட் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு சுகாதார துறை அதிகாரிகளின் உதவியோடு காவல்துறையினர் இறுதிச்சடங்கு செய்துள்ளனர். இதுகுறித்து காவத்துறை அதிகாரி துருவ் கூறுகையில், கங்கா ஆயதா கோர்சா என்ற நக்சலைட் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தெலுங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். இதனையடுத்து, சுக்மா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க வரவில்லை.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து கோர்ச்சாவிற்கு  இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சுகாதாரத் துறையின் உதவியோடு, காவல்துறையினர் கோர்சா உடலை இறுதி சடங்கு செய்தனர் என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்