தங்கள் அன்பிற்குரியவர்களை இறுதியாக பார்க்க சி.சி.டி.விகளை பயன்படுத்தும் மயானம்..!

இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்ப்பதற்காக சி.சி.டி.வி கருவிகளை பொறுத்தியுள்ள மயானம்.
கொரோனா பரவலின் காரணமாக இறப்பவர்களின் இறுதி சடங்கில் யாரும் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடில் ஒரு மயானத்தில் எட்டு சி.சி.டி.வி கேமராக்களுடன் இணைய வசதிகளோடு, இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை ஏற்பாடு செய்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷத் ஷா கூறுகையில் ,ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடு மிக அவசியம் என்பதால் பலர் தங்களின் நெருங்கிய உறவினர்களின் கடைசி பார்வையை பார்க்கமுடியாமல் உள்ளது. அதனால் இறந்தவர்களின் கடைசி நிமிடங்களை பார்க்கும் விதமாக இந்த முயற்சியை ஏற்படுத்தியுள்ளோம்.
தகனத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு, மயானத்தில் எட்டு சி.சி.டி.வி கருவிகளையும் இணைய வசதியையும் 55,000 ரூபாய் செலவில் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025