குட்நியூஸ்..!மதிய உணவு திட்டத்தின் மூலம் 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

இந்தியாவில்,மதிய உணவு திட்டத்தின் மூலமாக 11.8 கோடி மாணவர்களுக்கு,அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன்காரணமாக,பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,மாணவர்களின் கவலையை போக்கும் வகையில்,தற்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது,நாடு முழுவதும் உள்ள 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற திட்டத்தின் மூலம் பணம் அனுப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,மதிய உணவு திட்டத்திற்கு தகுதி உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சமையல் செலவுக்கு சமமான தொகையை வழங்கும் திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”மத்திய அரசு DBT மூலம் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி உதவி வழங்கும்.இதற்காக,ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும்,நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகளுக்கு இந்த நிதியுதவி பயனளிக்கும்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்