பழிக்குப் பழி;இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்…!
ராஜஸ்தானின்,பரத்பூர் அருகே காரில் சென்ற டாக்டர் தம்பதியினர், இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் வசிக்கும் டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தா ஆகிய இருவரும் தீபா என்ற 25 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில்,டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தாவும்,நேற்று தங்கள் காரில் பரத்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,திடீரென்று பைக்கில் வந்த இருவர் அவர்கள் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பின்னர்,அவர்களை நோக்கி ஐந்து முறை சுட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.இதற்கிடையில்,டாக்டர் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பரத்பூரின் நீம்தா கேட் பகுதியில் இருந்த போக்குவரத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியது.அதனைக் கொண்டு,தாக்குதல் நடத்தியவர்கள் இருவரும்,டாக்டர் தம்பதியினரால் 2019 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட தீபாவின் சகோதரர் மற்றும் உறவினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து,அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.