தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு இல்லை- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!

Default Image
தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்களிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 43 வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.நடப்பாண்டில் நடைபெற்ற முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.அந்த கூட்டத்தில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு கோர மாநிலங்கள் வலியுறுத்தின.
அதனைத் தொடர்ந்து,காணொலி மூலம் நடைபெற்ற, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.அப்போது பேசிய அவர், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு இறக்குமதி ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படும்.மருத்துவ ஆக்சிஜன்,ஆக்சிஜன் செறிவூட்டிகள்,போக்குவரத்து சாதனங்கள், கொரொனா பரிசோதனை கருவிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்கு இந்த ஐஜிஎஸ்டி வரி விலக்கு பொருந்தும்.
மேலும் கருப்பு பூஞ்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து மீதான IGST வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்”,என்று கூறினார்.
இந்நிலையில்,தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டியில் விலக்களிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்