அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனா தொற்றால் காலமானார்…!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனா தொற்றால் காலமானார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவற்றால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பல உயிரிழந்துள்ளனர். மேலும் சில பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) அவர்கள், கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் 4 புத்தகங்களையும், 90 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார். ஆனந்த கிருஷ்ணனுக்கு 2002-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025