IPL 2018:தோனிக்கு அதிகரிக்கும் அன்புத்தொல்லைகள்!பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மறுபடியும் தோனியின் காலில் விழுந்த ரசிகர்!

Default Image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கடந்த 20 தேதி நடைபெற்ற  ஐ.பி.எல் போட்டியில்  64 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மேலும், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றிக்கு ஷான் வாட்சன் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் 51 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார்.

இப்போட்டியின் போது ரெய்னாவுடன் இணைந்த தோனி 5 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அந்த சமயம், பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர், தோனியின் காலை தொட்டு வணங்கினார். அந்த ரசிகரிடம் தோனி ஏதோ பேச, மகிழ்ச்சியில் நெஞ்சை பிடித்தபடி ரசிகர் துள்ளிக்குதித்து சென்றார். இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image result for dhoni feet against rajashthan match

தோனியின் காலில் ரசிகர்கள் விழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை- இந்தியா மோதிய ஒருநாள் போட்டியில், இதேபோன்ற சம்பவம் நடந்தது. ஜனவரி மாதத்திலும் விஜய் ஹசாரே போட்டியில் ரசிகர்கள் தோனியின் பாதத்தை தொட்டு வணங்கிய நிகழ்வு அரங்கேறியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records