#BREAKING: முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு- முதலமைச்சர் அறிவிப்பு..!

Default Image

தமிழகத்தில் ஜுன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்து ஊரடங்கு வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிய உள்ள நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை இதே கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்