ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள்..!

Default Image

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தடுப்பூசியை போடுவதில் நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி ஸ்ரீநகரில் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீநகரின் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா இதுகுறித்து கூறுகையில், 44 திறந்தவெளி தடுப்பூசி மையங்கள் மூலமாக ஊடகவியலாளர், கடை உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் ரிக்ஷா போன்ற வாகனங்களை இயக்குபவர்கள் இந்த திறந்தவெளி தடுப்பூசி மையங்களை எளிமையாக பயன்படுத்தும் நோக்கில் இதை அமைத்துள்ளோம். மேலும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் நோக்கம் குறித்தும் அறிவுறுத்தி வருகிறோம்.

மக்களிடையே தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தவறான கருத்து பரவி வருகிறது. ஆனால் இது உண்மை கிடையாது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஷர்மீன் கூறியுள்ளார். மேலும் இவர், தடுப்பூசியை பற்றிய வதந்தியை நம்பவேண்டாம். ஒரு நாளைக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போடுவதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்