பிஎன்பி வங்கி வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக ஹாங்காங்கில் வழக்குப்பதிவு!
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில்,நிதி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக, ஹாங்காங் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அங்குள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை முடக்கி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் முகுல் சோஸ்கிக்கு சொத்துகள், வைர நகை கடைகள் உள்ள பிற நாடுகளிலும் இதுபோன்று வழக்கு தொடர அனுமதி கோரப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், 280 கோடி ரூபாய் மோசடியும், 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் சட்ட விரோத பரிவர்த்தனையும் செய்தார் என்பது நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.