தோழர் இரா.ஜவகர் கொரோனாவால் இறப்பு;முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

Default Image

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது.

இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தோழர் இரா.ஜவகர் உயிரிழந்தார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,”மூத்த பத்திரிக்கையாளரும், பொதுவுடைமைச் சிந்தனையாளருமான திரு.இரா.ஜவகர் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.அவரது மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்குப் பேரிழப்பாகும்.

இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இரா.ஜவகர் அவர்கள்,அரிய நூல்களைப் படைத்தளித்தவர் என்பதுடன்,தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும்,மாறாத பற்றும் கொண்டவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள்,பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மறைந்த தோழர் இரா.ஜவகர் அவர்களின் குடும்பத்தினர்க்கு,பத்திகையாளர்கள்,அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக,தோழர் இரா.ஜவகர் அவர்களின் மனைவியான பேராசிரியர் பூரணம் அவர்களும்,கடந்த ஆண்டு 14.9.2020 இல் கொரோனாவால்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்