இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!
உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமன்தீப் கில் புகாரை ஏற்ற காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர், விசாரணையில் தொலைபேசியை சல்மான் அகமது என்பவர் வைத்திருந்தது தெரியவந்தது. அகமதுவைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சல்மான் அகமது ருகையாவிடம் இருந்து தொலைபேசி வாங்கியதாக கூறினார்.
பின்னர், ருகையாவை பிடித்து விசாரணை செய்ததில் கொரோனா நோயாளிடமிருந்து தொலைபேசியை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய தொலைபேசியை மறுநாளே தனது நண்பர் சல்மானிடம் கொடுத்ததாகவும், மேலும், மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தையும் திருடியாதாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ருகையாவை போலீசார் கைது செய்தனர்.