கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உலகின் முதல் மனிதரான வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமானார்..!

உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபரான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்,முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போட்ட உலகின் முதல் மனிதர் என்ற வரலாற்றை உருவாக்கியவர்.இதன்மூலம்,அவர் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் முதல் நபராகவும் ஆனார்.அதன் காரணமாகவே,கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.
இந்நிலையில்,வில்லியம் ஷேக்ஸ்பியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார். மேலும்,அவர் இறந்த தகவலை ஆங்கில செய்தி ஊடகங்கள் தங்களது இதழில் வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து,இங்கிலாந்தில் உள்ள தொழிற்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்,மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு,தனது இரங்கலை தெரிவிக்கும் வகையில் கூறியதாவது,”கட்சிக்கு பல வருடங்களாக வில்லியம் சேவை செய்தவர்.எனவே,அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறினார்.
மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியர்,பிரபல விலையுயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் பணிபுரிந்தார் மற்றும் பாரிஷ் கவுன்சிலராக இருந்து பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025