180 பயணிகளுடன் சென்ற நைஜீரிய கப்பல் கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி, 156 பேர் மாயம்!

Default Image

நைஜீரிய நாட்டின் வடமேற்கு கெப்பி மாநிலத்தில் இருந்து 180 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரிய நாட்டின் வடகிழக்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலா நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக படகு ஒன்று 180 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் மீட்கப்பட்டு நிலையில், படகில் இருந்த 156 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி செயலாளர் யூசுப் அவர்கள், படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்பட்டுள்ளதால், படகு பலவீனமடைந்து தான் கவிழ்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை எனவும், படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் இந்த பயணிகளுடன் ஏற்றப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணி தொடர்ந்து வருவதாகவும் ,20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என கூறப்படுவதாகும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்