எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு!
பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக இழிவான பதிவைப் பகிர்ந்திருந்தார்.
இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.