IPL 2018:பஞ்சாப் அணி அதிரடி ஆட்டத்தில் தடங்கல்!கொல்கத்தா -பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் மழை குறுக்கீடு!மழையால் போட்டி பாதிப்பு !
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக லின் (74),தினேஷ் கார்த்திக்(43),உத்தப்பா (34) ரன்கள் அடித்தனர்.பஞ்சாப் பந்துவீச்சில் பரிந்தர் சரன்,டை தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தற்போது பஞ்சாப் அணி 192 ரன்கள் இலக்குடன் ஆடியது.ஆட்டத்தின் போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் அணி 96 ரன்கள் அடித்துள்ளது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெயில் (49),ராகுல் (46)ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.