ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்காக ஆந்திராவில் திருநங்கைகள் கோயில் !
திருநங்கைகள் , ஆந்திராவில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்காக கோயில் கட்டுகின்றனர்.
இதற்காக அந்த மாநிலம் நந்தியாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா, அடிக்கல் நாட்டினார். 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் கோவிலில், சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்படும் என்று திருநங்கைகள் தெரிவித்தனர்.
மாதாந்திர உதவித்தொகை, வீடு, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, திருநங்கைகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இதற்கு நன்றிக்கடனாக, அவருக்கு கோவில் கட்டுவதாக திருநங்கைகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.