தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதி வெளியீடு!
தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர்,கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதியைத் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகம் இருந்தால் வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
நான்காம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.