பேஸ் புக்கை தொடர்ந்து மத்திய ஐ.டி. அமைச்சகத்தின் விதிகளுக்கு அடிபணிந்த கூகுள்…!

Default Image

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

இதன் மூலம் புகார் அளித்தல்,ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல்,இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் போன்றவற்றை செய்ய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

ஆனால்,மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு கூகுள்,ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை பதிலளிக்காத நிலையில் இத்தகைய தளங்களை தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்த புதிய ஐ.டி.விதிகளுக்கு இன்றுடன் கால அவகாசம் முடியும் நிலையில்,தற்போது இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”இந்தியாவின் சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம்.அதனால்,அந்த சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு எதிர்காலத்தில் கூகுளுக்கு உண்டு”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்