இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,291 பேருக்கு கொரோனா பாதிப்பு….! 4,157 பேர் உயிரிழப்பு…!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,08,291 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 4,157 ஆகவும் பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,71,57,795 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 2,08,291 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 21 தேதி முதல் 3 லட்சத்தை கடந்து வந்த தொற்று எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,71,57,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் இறப்பு எண்ணிக்கை 4,157 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,11,388 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,95,955 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,43,50,816 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 24,95,591 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை நாட்டின் இதுவரை 20,06,62,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.