PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர ராஜகோபாலை காவல்துறை கைது செய்தனர்.
ஜூன் 8-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து, PSBB பள்ளி தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.