என் பெற்றோர் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே-ஸ்ருதி ஹாசன் வெளிப்படை பேச்சு!

Default Image

விவாகரத்து பெற்று பிரிந்த தனது பெற்றோரைப் பற்றி நீண்ட நாள்களுக்கு பிறகு மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர்களான கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் விவாகரத்து பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார், மேலும் அவர்கள் பிரிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூர் இருவரின் மகள் ஸ்ருதி ஹாசன் ஆவார். மேலும் அவர்களுக்கு ஸ்ருதியை விட இளையவரான அக்ஷராஹாசன் என்ற மற்றொரு மகள் உள்ளார். கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூர் இருவரும் 1988 இல் திருமணம் செய்து 2004 இல் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்தனர். அப்போது அவர்களது மகளான ஸ்ருதிஹாசனுக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை (மே 24) ஜூம் டிஜிட்டலில் பேசிய ஸ்ருதி, கணவன்-மனைவி இணக்கமாக இல்லாவிட்டால் அவர்கள் ஒன்றாக இருக்க எந்த காரணமும் அவசியமில்லை என்றும், மேலும் 2 நபர்களும் தங்கள் வாழ்வில் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிவதில் தவறேதும் இல்லை என்றும் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர்கள் தங்களது சொந்த வாழ்க்கையை அவர்களுது விருப்படி வாழ்வதில் தான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும், அவர்களது பிரிவில் தனக்கு எந்த வித மனக்குறையும் இல்லை என்றும், தற்போது தந்தையுடன் இணக்கமாக இருந்தாலும், தனது தாயும் தன் வாழ்வின் ஒரு அங்கம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Nithyananda
narendra modi donald trump
siraj
rain tn
Waqf Amendment Bill 2025
RCB vs GT