செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம்.., மு.க.ஸ்டாலின் மாலை ஆய்வு..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக அரசு தம்மிடமுள்ள கட்டமைப்பை கொண்டு ஆக்ஸிஜன் போன்ற போன்றவைகளை கையிருப்பில் வைத்துள்ளன. இதனால், தடுப்பூசி தயாரிப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் இருக்க காரணம் மத்திய அரசின் தடையில்லா சான்று கிடைக்காததுதான் என கூறப்படுகிறது.