நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்…! 200-க்கும் மேற்பட்டோர் காயம்…!
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில், மெட்ரோ ரயில் ஒன்று காலி பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் மற்றோரு ரயில் வந்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், ரயில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வந்த தவறான தகவல் தொடர்பு காரணமாக தான் இந்த விபத்து நடந்த்திருக்க கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த விபத்து மெட்ரோ அமைப்பின் 23 ஆண்டுகால செயல்பாட்டில் முதல் முறை நடந்த பெரிய விபத்து என்று போக்குவரத்து அமைச்சர் வீகா சியோங் கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.