கொரோனா தொற்றுக்கு இணையாக கருப்பு பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பின் தீவிரம் இன்னும் தணியாத நிலையில், தற்போது புதியதாக கருப்பு பூஞ்சை, வெள்ளைப்பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என புதிய தொற்று நோய்கள் பரவி வருகிறது. இந்த தொற்று நோய் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில், பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இணையாக கருப்பு பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே அதிகரிக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.