#BEAKING: தமிழகம் முழுவதும் 4,900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை..!
இன்று இன்று 13 ஆயிரத்து 96 வாகனங்கள் மூலம் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம அளவில் காய்கறிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார். குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்திட வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
நேற்று 6,297 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்பட்டது. நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்று இன்று 13 ஆயிரத்து 96 வாகனங்கள் மூலம் கிட்டத்தட்ட 6,500 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்க எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,500 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 1,236 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வாகனங்கள் மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது முடக்கம் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.