முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை பரிசாக வழங்கிய உதயநிதி…!
முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை பரிசாக வழங்கிய உதயநிதி.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் நிவாரண பொருட்களை வழங்குதல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இவர் நடேசன் சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்ற சிறுவர்கள், கொரோனா தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து முறையாக முக கவசம் அணிந்து இருந்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்து வழங்கினார்.
மேலும் அவர் நேற்று இரவு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள இரவு நேர நகர்புற வீடற்றோர் காப்பகங்கள் மேற்றும் அரவணைப்பகத்தை ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு உணவளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.