கேரளாவை சேர்ந்த பி-டேக் மாணவனின் புதிய கண்டுபிடிப்பு…! மைக் மற்றும் ஒலிப்பெருக்கியுடன் முகக்கவசம்….!

Default Image

கேரளாவை சேர்ந்த , பிடெக் முதலாமாண்டு மாணவர் மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மனிதனை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கூடிய முக்கியமான ஒரு கவசமாக தான் முக கவசம் திகழ்கிறது. முக கவசங்கள் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ள நிலையில், திருச்சூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு பிடெக் மாணவர் புதிய வகை மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

கேவின் என்ற மாணவர் ஒரு மருத்துவரின் மகன் ஆவார். தனது பெற்றோர்  நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்படுவதை கவனித்த அவர், மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட முகமூடி ஒன்றை வடிவமைத்துள்ளார்.தான் வடிவமைத்த முகமூடியை முதலில் தனது பெற்றோர்களான டாக்டர் செனோஜ் கே.சி மற்றும் டாக்டர் ஜோதி மேரி ஜோஸ் ஆகியோரிடம் சோதித்தார். அதனை தொடர்ந்து அதன் தேவை அதிகரித்ததை அடுத்து மேலும் அதிகமான முகமூடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.

இந்த முகமூடியை 30 நிமிடம் சார்ட் செய்தபின் 4 முதல் 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இது ஒரு காந்தத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முகமூடி ஆகும். இந்த முகமூடியை பயன்படுத்தும் போது நோயாளிகளிடம் மருத்துவர்கள் பேசுவதற்கான சிரமம் தவிர்க்கபடுவதாகவும், இது குறித்து மற்றவர்களிடம் நல்ல கருத்துக்கள் தான் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் கூறுகையில், இது போன்ற 50-க்கும் மேற்பட்ட முகமூடிகளை தென்னிந்தியாவில் மருத்துவர்கள் பயன்படுத்துவதாகவும், இந்த சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான மூலதனமும், உபகரணங்களும் என்னிடம் இல்லை. ஆனால் ஒரு பெரிய நிறுவனம் இந்த சிறிய உதவியை செய்ய எனக்கு தயாராக இருந்தால், இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்