கங்கையில் மிதக்கும் சடலங்களுக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பு – ராகுல்காந்தி விமர்சனம்!

Default Image

கங்கையில் மிதக்கக்கூடிய சடலங்களுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு எனவும் இதற்கு அனைவரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பேற்க வேண்டியதில்லை எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கொடுக்க முடியாமல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசுகள் திணறி வருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட இடம் இல்லாத நிலையும் பல இடங்களில் உருவாகியுள்ளது. இதனை அடுத்து கங்கையில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வருவது குறித்து பலரும் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அது போல தற்போதும் கங்கையில் சடலங்கள் மிதப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் இறந்த உடல்களின் படங்களை பகிர்வதற்கு தான்  விரும்பவில்லை எனவும், இதனால் ஒட்டுமொத்த உலகமும் இந்த படங்களை பார்த்து சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேறுவழியில்லாமல் கங்கை நதியோரம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை விட்டு சென்றவர்கள் வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் இது அவர்களின் தவறல்ல, மத்திய அரசு மட்டுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது அல்ல எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்