#Breaking:தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி..!422 பேர் பலி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,இன்று மட்டும் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ளது.இதனால்,கடந்த 24 மணிநேரத்தில் 35,483 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே,இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,42,344 பேராக அதிகரித்துள்ளது.
குறிப்பாக,சென்னையில் 5,169 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.மேலும்,தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 422 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
எனவே,இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20,468 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் இன்று கொரோனாவிலிருந்து 25,196 பேர் குணமடைந்த நிலையில்,இதுவரையிலும் 15,27,733 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,தற்போது கொரோனா வார்டில் 2,94,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025