ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் -முதல்வர் ..!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது; அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.