தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் தேனி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.