#BREAKING: இன்றும், நாளையும் தனியார், அரசு பேருந்துகள் இயங்க அனுமதி..!

இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுளள்து.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு மற்றும் மருத்துவக்குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025