பயனர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர்…! மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…!
25 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்த காரணத்தால், சேவையை நிறுத்த போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தில், மக்களின் தேடுதல் அதிகமாக காணப்படுகிறது. மக்களின் தேடல்களுக்கு உடனடியாக எங்கு பதில் கிடைக்கின்றதோ அங்குதான் மக்களின் நாட்டமும் செல்கிறது.
அந்தவகையில் கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்கள் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. இந்த பிரவுசர்களின் search engine மிகவிரைவாக செயல்பட்டு, பயனர்களுக்கு தேவையான தகவல்களை, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட விரைவாக கொடுக்கிறது. இதற்கு இணையாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரால் செயல்பட இயலாத காரணத்தால், இது பயனர்களின் ஆதரவை இழந்துள்ளது.
25 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்த காரணத்தால், சேவையை நிறுத்த போவதாகவும், அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முழுமையாக இந்த சேவையை நிறுத்தப்படுகிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய மைக்ரோசாப்ட் எட்ஜ் புரோகிராம் மேனேஜர் சியான் லையன்டர்சே, அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் கணினிகளில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்படாது என்றும் அறிவித்துள்ளார். பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியது தான், மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.