மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம்..!!77 நாட்களுக்குப் பிறகு திறப்பு..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில், கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டப முகப்பு சேதமடைந்தது. புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆயிரம்கால் மண்டபத்திற்குப் போகும் வழி சீரமைக்கப்பட்டுள்ளது. அதனால் 77 நாட்களுக்குப் பிறகு, ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்