ஜகமே தந்திரம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு..!!
ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள நேத்து என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியீட முடிவு செய்தனர். அதன் படி வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் படத்திலுருந்து வெளியான 2 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக படத்தில் இடம்பெற்றுள்ள நேத்து என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை தனுஷ் எழுதி தனுஷே பாடியுள்ளார். இதோ அந்த பாடல்.
#Nethu (Tamil) – Song Video from #JagameThandhiram is here !https://t.co/TiIKQwRP35
Singer-u & Poet-u @dhanushkraja ????
A @Music_Santhosh Musical@karthiksubbaraj @sash041075 @chakdyn @StudiosYNot @Shibasishsarkar @APIfilms @NetflixIndia @onlynikil
— Y Not Studios (@StudiosYNot) May 22, 2021