துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம்…! திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி…!

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் அவர்களது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினரால், 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இன்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கும் பொதுமக்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து, அசம்பாவிதங்கள் தவிர்க்க, தூத்துக்குடியில் பாதுகாப்பு பணிக்காக 1,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் அவர்களது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.