கார் மீது டிரக் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தில் கார் மீது டிரக் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே டிரக் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் இருந்த மஞ்சு, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிஜ்னோரிலிருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மீது டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்