மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!
கொரனோ பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஊரடங்கு வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைவதால் நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை ஈடுபட்டார். கோவை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.