#BREAKING: வீடு திரும்பிய விஜயகாந்த்..!

Default Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை, தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, கைகளை மட்டுமே அசைத்து வாக்கு சேகரித்தார்.

இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சிறுநீர் தொற்று காரணமாக கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

விஜயகாந்த் சோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்