தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
வெப்பச்சலனம் அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.