கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடபட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் மிக அதிமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்றார்போல இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசனை அமைப்பு கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில்,
- வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும்.
- காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும்.
- ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும்.
- வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி உள்ளிட்டவை பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.