#Breaking:மீண்டும் அதிகரித்த தொற்று பாதிப்பு..!2,76,070 பேருக்கு கொரோன தொற்று உறுதி…! 3,874 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,76,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,76,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,57,72,400 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கடந்த ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.எனவே,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,23,55,440 ஆகும்.மேலும்,31,29,878 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்,முன்னதாக 2,63,533 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து,இந்தியாவில் இதுவரை 18,70,09,792 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025