இன்று இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்…!

இன்று இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்.
கேரளாவில், ஏப்ரல் 6-ம் தேதி தேர்தலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று கேரளாவில் பினராயி விஜயன் அவர்கள், முதல்வராக இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வருடன் 21 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், முதல்வர் பினராயி விஜயனை தவிர, மற்ற 11 அமைச்சர்களும் புதியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025