கணவர் கூறினால் நடிப்பதை விட்டுவிடுவேன் – காஜல் அகர்வால்..!
என் கணவர் கூறினால் நடிப்பை நிறுத்துவிட சொன்னால் நிறுத்திவிடுவேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து முடிந்த பின்னும் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் திருமணம் முடிந்து விட்டது நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” என் கணவர் சினிமா பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். ஒருவேளை எதிர்காலத்தில் தனது கணவர் நடிப்பை நிறுத்திவிடு என்று கூறினால் உடனே நிறுத்திவிடுவேன்” என்று கூறியுள்ளார்.