IPL 2018: கிறிஸ் கெய்ல்லின் அதிரடியில் கதி கலங்கி போன கொல்கத்தா அணி!கெய்ல்லை வீழ்த்த தீவிர ஆலோசனை !உண்மையை கூற மறுத்த கேகேஆர் பயிற்சியாளர்
சென்னைக்கும், சன் ரைசர்ஸுக்கும் எதிரான ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் வீறு கொண்டு எழுந்து விளாசியதையடுத்து அடுத்ததாக கொல்கத்தா அணி அவரை என்ன செய்வது என்று திட்டம் தீட்டி வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக் இது குறித்து கேட்ட போது, “நிறைய பேர் பவுலிங் கோச்சுகளான எங்களிடம் கெய்லை வீழ்த்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டவண்ணம் இருக்கின்றனர். அதை எப்படி நாங்கள் தெரிவிக்க முடியும்? அவருக்குத் தெரிந்து விடாதா? எனவே எங்களால் கூற முடியாது. கெய்ல் ஒரு அபாயகரமான வீரர்.
அவருக்கு எதிராக எப்படித் தொடங்குகிறோம் என்பது முக்கியம், அவரை ரிதமுக்கு வரவிட்டால் அவ்வளவுதான், சக்திவாய்ந்தவர், அவரது இடத்தில் பந்து விழுந்தால் பந்து நிச்சயம் பறக்கும்.
கடந்த இரவு கெய்ல் பேட்டிங் குறித்த பல உதாரணங்களில் ஒன்று, ஐபிஎல் மட்டுமல்ல அவரது கிரிக்கெட் வாழ்க்கையே அப்படித்தான். அவருக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம்.
மே.இ.வீரர்கள் அனைவரும் ஐபிஎல் மட்டுமல்ல உலகம் முழுதும் லீகுகளில் பரிமளிக்கக் காரணம் டெஸ்ட் போட்டிகள் மீது அவர்களுக்குச் சோர்வு ஏற்பட்டுவிட்டது. சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், பிராவோ, கெய்ல், பொலார்ட் ஆகியோர் உலகம் முழுதும் பெரிய லீகுகளில் ஆடுகின்றனர்.இதனால் இந்த வடிவத்தில் ஸ்பெஷலிஸ்டுகளாகத் திகழ்கின்றனர்” என்றார் ஹீத் ஸ்ட்ரீக்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.