உங்களுக்கு ஒரே நேரத்தில் கருப்பு பூஞ்சை மற்றும் கொரோனா வருமா ? அதற்கான பதில் இதோ !

Default Image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும்  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் மிக அதிமாக பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறிவிட்டது.

இந்த வைரஸ் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்தது  மட்டுமல்லாமல், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாளும் புதிய சவால்கள் உருவாகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும்  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த கருப்பு பூஞ்சை என்ற புதிய அறிகுறி வெளிவந்துள்ளது, இது மக்கள் மத்தியில் துன்பத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா உடன் இணைக்கப்பட்ட கருப்பு  பூஞ்சை தொற்று என்றும் அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் நாட்டின் மருத்துவமனைகளில் முழுவதும் பரவத் தொடங்கியது.

ஒரே நேரத்தில் கருப்பு பூஞ்சை மற்றும் கொரோனா இரண்டும் வருமா என்று யோசிக்கிறீர்களா..? மெடிசின்நெட்டில் ஒரு அறிக்கையின்படி, கொரோனா உடன் பூஞ்சை தொற்று ஏற்படலாம். குறிப்பாக ஐ.சி.யுவில் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு  எச்.ஐ.வி மற்றும் பிற நோய்கள் கொண்டவர்களை தாக்கலாம்.

கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்:

கருப்பு பூஞ்சை நோய்க்கான சில அறிகுறிகள் தென்படும் போது, அவற்றை முன்னறிந்து சிகிச்சை மேற்கொண்டால், தீவிர பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால், காய்ச்சல், குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வு, நாசியில் நீர் ஒழுகுதல், தலைவலி, மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் தான் இதற்கான முன் அறிகுறிகள் ஆகும்.

கொரோனா உடன் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று வகைகள்

நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமாக தான் பூஞ்சை தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அஸ்பெர்கில்லோசிஸ் மற்றும் ஆக்கிரமிப்பு கேண்டிடியாஸிஸ் எனும் இந்த இரண்டு 2 பூஞ்சை தொற்றுகள் தான் பொதுவாக அதிகமாக பரவக்கூடியது எனவும், இவற்றை தவிர்த்து மியூகோமிகோசிஸ் மற்றும் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் மற்றும் கேண்டிடா ஆரிஸ் ஆகிய பூஞ்சை தொற்றுகளும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்பர்கில்லோசிஸ்:

அஸ்பர்கில்லோசிஸ் எனப்படக்கூடிய பூஞ்சை தொற்று ஏ.புமிகேடஸ் எனும் நுரையீரல் நோயை ஏற்படுத்தக்கூடியது. இவை தாவரங்கள் மற்றும் மண்ணில் தான் அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இன்வாசிவ் கேண்டிடியாஸிஸ்:

இன்வாசிவ் கேண்டிடியாஸிஸ் எனும் பூஞ்சையால் ஏற்படக்கூடிய நோய்தொற்று மூலம் பொதுவாக காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை ஏற்படுமாம். இந்த பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த ஓட்டத்தில் இந்த பூஞ்சை தொற்று கலப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை:

மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை என அழைக்கப்படக்கூடிய பூஞ்சை உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்